மேலும் செய்திகள்
செஞ்சியில் நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
07-Sep-2025
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசினார்.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு வரும், 15ல் மாவட்டத்தில் ஒவ்வொரு பூத் வாரியாக ஓட்டுச்சாவடி முகவர், பூத் கமிட்டி உறுப்பினர், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் அண்ணாதுரை படத்துக்கும், பிற இடங்களில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கரூரில், ௧௭ம் தேதி நடக்கும் முப்பெரும் விழாவில் அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் முன்னாள் எம்.பி., கந்தசாமி, நெசவாளரணி மாநில செயலர் சச்சிதானந்தம், விவசாய அணி மாநில இணை செயலர் குறிஞ்சி சிவகுமார், எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகர செயலர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
07-Sep-2025