அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து தி.மு.க.,வினர் இன்று ஆர்ப்பாட்டம்
காங்கேயம்:திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரும், அமைச்சருமான சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திய பொருளுக்கு இறக்குமதி வரியாக அமெரிக்கா, 50 சதவீதம் விதித்துள்ளது. இதனால் திருப்பூரில், 3,௦௦௦ கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டே திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை புறக்கணிக்கும் பா.ஜ., அரசை கண்டித்தும், உடனடி நிவாரண நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று (2ம் தேதி) காலை, 9:00 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.இதில் திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.