எஸ்.ஐ.ஆரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி, வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. பணியை கைவிடக்கோரியும், பா.ஜ., அரசின் கைப்பாவையாக மாறி வரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் வரும், 11ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே சிம்னி ேஹாட்டல் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்நிகழ்வில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.