உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி

ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணியை மேற்கொண்டனர்.லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகள் துவங்கியுள்ளன. அரசு அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான முதற்கட்ட பணிகளை அலுவலர்கள் துவக்கியுள்ளனர். இந்நிலையில், ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று இரு வேறு இடங்களில், ஓட்டுரிமை உள்ள ஓட்டுக்களை கண்டறிந்து அவற்றை ஒரே இடத்தில் மாற்றம் செய்வது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. விரைவில், இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி தீவிரமடைந்துள்ளது. நேற்று ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், ஓட்டுச் சாவடி அலுவலர்களான பள்ளி ஆசிரியைகள், 250க்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.நேற்று இறுதி நாள் என்பதால், ஒரே நேரத்தில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஆசிரியைகள் ஒன்று கூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி