மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
ஈரோடு: ஈரோடு, மேட்டுக்கடை தங்கம் மஹாலில், நேற்று நடந்த தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக பிச்சாண்டம்பாளையம் பிரிவு அருகே சண்முகம், மாணிக்கசுந்தரம் ஆகியோரின் விசைத்தறி பட்டறையை முதல்வர் ஆய்வு செய்து, அவர்களிடம் பேசினார். 'விசைத்தறி தொழிலில் லாபம் கிடைக்கிறதா' என கேட்டறிந்தார். 'விசைத்தறி கூடங்களுக்கு, 750 யூனிட் இலவச மின்சாரம் என்பதை, 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியது பயனுள்ளதா' எனவும் வினவினார். பயன் தருவதாக கூறியவர்கள், 'இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் அளவீடு செய்வதை மாற்றி, மாதம் ஒரு முறை கணக்கெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மாதம், 1,000 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். நலிவடைந்த, முழுமையாக இயங்காத விசைத்தறி கூடங்கள் மீண்டெழும் வாய்ப்புள்ளது' என்றனர். 'இக்கோரிக்கை பரிசீலனையில் உள்ளது' என்று முதல்வர் தெரிவித்தார். பின் அங்கிருந்து நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.
26-Nov-2024