மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
காங்கேயம், காங்கேயம் கோட்டம், உதவி மின் பொறியாளர் படியூர் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது. க.எண்.135, வடக்குபாளையம் படியூர் என்ற முகவரியில் இயங்கி வந்த உதவி மின் பொறியாளர் இயக்குதலும் மற்றும் பேணுதலும் அலுவலகம், நிர்வாக காரணங்களால் க.எண் 6/676 கே.என்.கே. வளாகம், ஊத்துக்குளி ரோடு, படியூர் என்ற முகவரியில் நாளை (27ம் தேதி) முதல் செயல்படும் என, காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் விமலா தேவி தெரிவித்துள்ளார்.