உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

காங்கேயத்தில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

காங்கேயம், ஜன. 3-தேசிய மின் சக்தி சிக்கன வார விழாவை முன்னிட்டு, மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி காங்கேயத்தில் நேற்று நடந்தது.பல்லடம் மின் பகிர்மான வட் டம் சார்பாக, காங்கேயம் - தாராபுரம் சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கு, காங்கேயம் கோட்ட மின் செயற்பொறியாளர் விமலாதேவி தலைமை வகித்தார். பேரணியில் மின் சிக்கனம், அவசியத்தை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வழியாக சென்று சென்னிமலை சாலையில் நிறைவடைந்தது. பேரணியில் அனைத்து உதவி செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர் மற்றும் அனைத்து ஊழியர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.உள்ளூர் வர்த்தக செய்திகள்* தாளவாடிஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 19 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 140 ரூபாய்; குறைபட்சம், 110 ரூபாய் என, 9.18 குவிண்டால் தேங்காய் பருப்பு, 1.13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* புன்செய்புளியம்பட்டியில் புதன் மற்றும் வியாழக்கிழமை நடந்த கால்நடை சந்தைக்கு, ஜெர்சி, சிந்து, நாட்டுமாடு, எருமை மற்றும் ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஜெர்சி மாடு, 20 ஆயிரம் முதல், 44 ஆயிரம் ரூபாய், சிந்து, 28 ஆயிரம் முதல், 55 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 40 ஆயிரம் முதல், 70 ஆயிரம் ரூபாய், எருமை, 22 ஆயிரம் முதல், 36 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. வளர்ப்பு கன்றுகள் 8,000 முதல், 16 ஆயிரம் வரையும் விற்றது. மொத்தம், 700க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளில், 600க்கும் மேற்பட்டவை, ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 60 கன்று; 22,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 கன்று; 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடு; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, கோவா மாநில விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வமாக மாடுகளை வாங்கினர். * கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 34 ரூபாய், நேந்திரன், 55 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 560, தேன்வாழை, 610, செவ்வாழை, 1,210, ரஸ்த்தாளி, 620, பச்சைநாடான், 480, ரொபஸ்டா, 420, மொந்தன், 400 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 4,180 வாழைத்தார்களும், 8.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், காய்ந்த நிலக்கடலை, 157 மூட்டை வரத்தாகி, கிலோ, 63.21 - 71.19 ரூபாய் என, 3.63 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 1,937 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை, 37,535 ரூபாய்க்கு ஏலம் போனது.-* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,675 ரூபாய்க்கு ஏலம்போனது. முல்லை-1,540 ரூபாய், காக்கடா-950, செண்டுமல்லி-66, கோழிகொண்டை-125, ஜாதிமுல்லை-750, கனகாம்பரம்-700, சம்பங்கி-160, அரளி-220, துளசி-40, செவ்வந்தி-180 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ