மேலும் செய்திகள்
காங்கேயம் வி.ஏ.ஓ., உதவியாளர் விபரீதம்
31-Mar-2025
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த கீரனுார், கவளக்காட்டுவலசை சேர்ந்த டிரைவர் துரைசாமி மகன் லோகேஷ்வரா, 24; ஈரோடு மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லுாரியில் படித்தார். படிக்கும்போதே கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என தந்தையிடம் புலம்பி வந்துள்ளார். வீட்டில் நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு கொண்டார். இதைப்பார்த்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியோடு மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Mar-2025