மேலும் செய்திகள்
281 கைவினை கலைஞருக்கு ரூ.6.74 கோடி கடனுதவி
20-Apr-2025
ஈரோடு::குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படுத்த 'புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை' (நீட்ஸ்) செயல்படுத்துகிறது.இத்திட்டத்தில் தொழில் துவங்கும் தொழில் முனைவோர் திட்ட மதிப்பில், 25 சதவீதம் அல்லது 75 லட்சம் ரூபாய் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., படித்தோர், இளங்கலை பட்டம் பெற்ற, 21 முதல், 55 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.மகளிர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.msmeonline.tn.gov.in/needs இணைய தளத்தில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்புகளுடன், 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ஈரோடு - 638 001' என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
20-Apr-2025