மேலும் செய்திகள்
ஜவுளி கடைகளில் அலைமோதிய கூட்டம்
28-Oct-2024
ஈரோடு: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (31ம் தேதி) வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்-ளது. இதனையொட்டி, ஜவுளி எடுப்பதற்காக கடந்த சில நாட்களாக ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், நேற்று இறுதி நாள் ஷாப்பிங் செய்ய ஒரே நேரத்தில் ஜவுளி எடுப்பதற்காக கடை வீதிகளில் குவிந்ததால், சாலையே தெரி-யாத அளவிற்கு மக்கள் தலைகளாகவே காணப்-பட்டது. காலை முதல் மாலை வரை இருந்த கூட்டத்தை விட நேற்று இரவு, 7:00 மணிக்கு மேல் ஆர்.கே.வி., சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, திரு-வேங்கடசாமி வீதிகளில் மக்கள் கூட்டம் அதிக-ளவில் இருந்தது. ஒரு சில இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கான அழகுசாதன பொருட்கள், வாட்ச், பெல்ட், காலணி என பல்-வேறு கடைகள் சாலையோரம் முளைத்திருந்-தன. ஜவுளி கடைகள் மட்டும் இன்றி பட்டாசு கடைகள், ஸ்வீட்ஸ் கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களிலும், கார்களில் பலர் வந்ததால் போக்குவரத்து நெரிசலால் மாநகரமே திணறியது.பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் இருந்து, நேதாஜி சாலையிலும், அதேபோல், காவேரி சாலையில் இருந்து (கிருஷ்ணா தியேட்டர் சந்-திப்பு) ஆர்.கே.வி. சாலை வரை அனைத்து வகை-யான வாகனங்களுக்கும் தடை விதித்து, சாலையின் நடுவே பேரிகார்டுகள் கொண்டு தடுக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்ட நெரிசலை பயன்-படுத்தி, பிக்பாக்கெட், திருட்டு, நகை பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, போலீசார் பாது-காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்களுக்கு திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க ஒலி பெருக்கி மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வந்தது. 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்களில் உள்ள பைனாகுலர் மூலம் கண்-காணித்த படியும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி-ருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
28-Oct-2024