உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நில அபகரிப்பு வழக்கு சிறப்பு முகாம்

நில அபகரிப்பு வழக்கு சிறப்பு முகாம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் புகார் மனுக்கள் மீது விசாரிக்கும் சிறப்பு முகாம் ஈரோட்டில் நடந்தது.ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு வழக்குக்கான சிறப்பு பிரிவு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த 27ம் தேதி துவங்கியது. இதுவரையில் 384 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்களில், இரு தரப்பினருக்கான விசாரணை கூட்டம் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன் தலைமையில், டி.சி.பி., டி.எஸ்.பி., கோவிந்தராஜ் முன்னிலையில் மனுக்கள் விசாரிக்கப்பட்டது. எஸ்.ஐ.,க்கள் முத்துசாமி, தேவி அடங்கிய குழுவினர் புகார்தாரர்களின் மனுக்களை விசாரித்தனர்.ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன் கூறுகையில், ''பொதுமக்களிடம் இருந்து இதுவரையில் 384 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஏழு வழக்குகளில் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்துள்ளோம். 110 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 267 மனுக்கள் விசாரணையில் உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை