உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு, தனியார் பஸ்கள் நம்பியூரில் கடும் போட்டி

அரசு, தனியார் பஸ்கள் நம்பியூரில் கடும் போட்டி

கோபிசெட்டிபாளையம்: நம்பியூரில் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களின் நேரப் பிரச்னையால், அரை மணி நேரம் பயணிகள் அவதிப்பட்டனர். ஈரோட்டில் இருந்து ஒரு தனியார் பஸ் தினசரி நம்பியூர் வழியாக சத்தியமங்கலம் செல்கிறது. நம்பியூர் பஸ் ஸ்டாண்டுக்கு காலை 10.15 மணிக்கு தனியார் பஸ் வர வேண்டும். சென்ற சில நாட்களாக 10.45 மணிக்கு வரும் இந்த பஸ், பயணிகளை ஏற்றிச்செல்கிறது. நம்பியூரில் இருந்து 10.45 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சத்தியமங்கலம் செல்கிறது. தனியார் பஸ் பயணிகளை ஏற்றிச்சென்று விடுவதால், அரசு பஸ்ஸில் பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. நேற்றும் வழக்கம்போல் 10.45 மணிக்கு தனியார் பஸ் நம்பியூர் வந்தது. தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பிடித்து, அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கு வாக்குவாதம் நீடித்தது. போக்குவரத்து கழக கிளை மேலாளர் கருப்பணன், நம்பியூர் போலீஸ் எஸ்.ஐ., ஆனந்தகுமார் ஆகியோர் பேச்சுவார்த்ததை நடத்தினர். 'காஞ்சிகோவில் அருகே பாலம் வேலை நடப்பதால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றி வருகிறோம். இதன் காரணமாக அரை மணி நேரம் தாமதமாகிறது. இனி இவ்வாறு நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறோம்' என, தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் வாக்குறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பிரச்னைக்கு முடிவுக்கு வந்தது. அரை மணி நேரம் நடந்த பிரச்னையால் பஸ் பயணிகள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை