உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணபதிபாளையம் ரயில் பாலத்தில் சிக்கிய லாரி 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கணபதிபாளையம் ரயில் பாலத்தில் சிக்கிய லாரி 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு : ஈரோடு அருகில் ரயில்வே பாலத்தில் சிக்கிய டேங்கர் லாரியால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோ - கரூர் நெடுஞ்சாலையில் கணபதிபாளையம் நால்ரோட்டுக்கு முன்னதாக, ரயில்வே பாலம் உள்ளது. உயரம் குறைவான அந்தப் பாலத்தின் வழியே, அதிகளவு பாரம் ஏற்றிய லாரிகள் செல்ல முடியாத வகையில், பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணியளவில், இப்பாலத்தை கடக்க முயன்ற, நிலக்கரி சாம்பல் ஏற்ற பயன்படும் டேங்கர் லாரி, இரும்பு தடுப்பு கம்பி மீது மோதி, பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. லாரியின் முன்பகுதி பாலத்தின் அடியிலும், டேங்கர் பகுதி பாலத்துக்கு வெளியே தடுப்பு கம்பியிலுமாக நின்றது. லாரி மோதியதில், தண்டவாளம் வழியே சென்ற சிக்னல் கம்பிகளும் சேதமடைந்தன. ஈரோடு - கரூர் ரோட்டில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு புறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன. காலை வேளையில் ஈரோட்டில் உள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல வந்தவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரிதும் அவதிப்பட்டனர்.

ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் நீண்டநேரம் போராடி, பொக்லைன் உதவியுடன் காலை 9 மணியளவில், டேங்கர் லாரியை வெளியில் கொண்டு வந்தனர். ரயில்வே ஊழியர்களும் சிக்னலை சரி செய்தனர். அதன்பிறகு போக்குவரத்து சீரடைந்தது. விபத்தால், ரயில்கள் செல்வதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரோடு ரயில்வே மேலாளர் (பொறுப்பு) அசோகன் கூறுகையில், ''ஒவ்வொரு ரயில்வே பாலத்தின் நுழைவிலும் எத்தனை அடி உயரம் வரை உள்ள வாகனங்கள் செல்லலாம் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். அதை கவனிக்காமல் செல்லும் போது தான் லாரிகள் இதுபோன்று மாட்டி கொள்கின்றன. பாலத்தின் முன் இரு புறமும் நுழைவு வாயில் முன் இரும்பு பாளங்களால், பாலத்தின் உயரம் அளவுக்கு தடுப்பு அமைத்து விட்டால், அதற்கு மேல் உயரமுள்ள லாரிகள் செல்ல முயன்றால் முன்கூட்டியே தடுக்கப்பட்டு விடும். இதை அமைக்க ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை