உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க.,வில் மேயர் பதவிக்கு 2 பேர் மனு

அ.தி.மு.க.,வில் மேயர் பதவிக்கு 2 பேர் மனு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு, அ.தி.மு.க.,வில் இரண்டு பேர் விருப்ப மனு அளித்தனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அ.தி.மு.க., கட்சியினர், நேற்று முதல் விருப்ப மனு வழங்கி வருகின்றனர். ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் பாண்டியன் மனுக்களை பெற்று வருகிறார். நேற்று மதியம் துவங்கிய மனுத்தாக்கலில், ஈரோடு மேயர் பதவிக்கு சூரம்பட்டி நகர செயலாளர் ஜெகதீசன், ஈரோடு முன்னாள் நகர செயலாளர் கவுரிசங்கர் ஆகியோர் மனு அளித்தனர். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 62 பேர் மனு அளித்தனர். நகராட்சி தலைவர், கவுன்சிலர், டவுன் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போதிய விண்ணப்பங்கள் இல்லை. சென்னையில் இருந்து அவை இன்றுதான் வருகின்றன. இன்று முதல் மனுக்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்