உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெவ்வேறு சம்பவம் கொடுமுடியில் மூவர் பலி

வெவ்வேறு சம்பவம் கொடுமுடியில் மூவர் பலி

கொடுமுடி: கொடுமுடியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மூவர் பலியாகினர். கொடுமுடி, சாலைப்புதூர் - ஒத்தக்கடை ரோட்டில், அரசம்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பலியானார். இறந்தவர் பற்றியும், விபத்துக்கு காரணமான வாகனம் குறித்தும், கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.* கொடுமுடி, ஏமகண்டனூர் பூவாண்டி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (71). கடந்த வாரம் வீட்டில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீவிபத்தில் படுகாயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி நேற்று காலை பலியானார்.* கொடுமுடி, கொல்லம்புதுப்பாளையம் காலிங்கராயன் கால்வாயில், 60 வயது மதிக்கத்தக்க உடல் மிதப்பதாக, வி.ஏ.ஓ., சதிஷ்குமார் தகவல் தெரிவித்தார். அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உடல் சிதைந்திருந்தது. கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை