| ADDED : செப் 08, 2011 03:05 AM
ஈரோடு: ஈரோடு காவிரிக்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின், பூ,
மாலை உள்ளிட்ட குப்பை கழிவு பெருமளவில் சேர்ந்துள்ளது.தமிழகத்தில் 1ம் தேதி
விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை
ஒட்டி, நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, பொதுமக்கள்
ஆர்வமுடன் வழிபட்டனர். ஐந்து நாட்கள் வழிபாட்டுக்கு பின், 5ம் தேதி சிலைகளை
ஊர்வலமாக மக்கள் எடுத்துச்சென்று, காவிரி ஆற்றில் கரைத்தனர்.ஈரோடு நகரின்
பல இடங்களில் இருந்தும், பள்ளிபாளையம், வெப்படை, ஆகிய இடங்களில் இருந்தும்
150க்கும் மேற்பட்ட சிலைகள் எடுத்துவரப்பட்டு காவிரியில் கரையில் வைத்து
கரைக்கப்பட்டன. சிலை கரைத்த போது, பூ மாலைகள் மற்றும் வாழைக் கன்றுகளை
கரைகளில் அப்படியே போட்டுச்சென்றனர். இதனால் காவிரி கரையில் குப்பைக் கழிவு
தேங்கி, அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.தவிர, ஆற்றில் போடப்பட்ட
சிலைகளும், மூன்று நாட்களுக்கு மேலாகியும், கரையாமல் அப்படியே தண்ணீரினுள்
கிடக்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக, இக்கழிவுகளை சுகாதாரத் தொழிலாளர்கள்
அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.