உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் டிரைவர்கள் அவதி

பஸ் டிரைவர்கள் அவதி

கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், பஸ்ஸை திருப்ப முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.கோபி நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, கோபி பஸ் ஸ்டாண்டு வளர்ச்சியடையவில்லை. ஈரோடு, அந்தியூர், கவுந்தபாடி பகுதியில் இருந்து வரும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது.குறுகிய சாலைக்குள் பஸ்ஸை திருப்ப முடியாமல் டிரைவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஒரு சில டிரைவர்கள் அதிவேகமாக வந்து பஸ் திருப்பும் போது விபத்து ஏற்படுகிறது.பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி உள்ளது. ஆக்கிரிப்பு கடைகளை அகற்றி, குறுகிய சாலையை அகலப்படுத்தினால், பஸ் போகவும், வெளியே வரவும் வசதியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை