உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தி, புளியம்பட்டிபள்ளிகள் சாம்பியன்

சத்தி, புளியம்பட்டிபள்ளிகள் சாம்பியன்

பவானி: பவானி கிரேஸ் பள்ளியில், கோபி கல்வி மாவட்ட அளவிலான குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள் நடந்தது. 150 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் சத்தி சாரு மெட்ரிக் பள்ளியும், பெண்கள் பிரிவில் புன்செய் புளியம்பட்டி கே.ஓ.எம். பள்ளியும் பெற்றன.பரிசளிப்பு விழாவுக்கு, பள்ளிதாளாளர் மதலைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அதிகாரி மணியம்மாள், செயலாளர் வின்சென்ட் அமல்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி குமார் பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் வீரப்பன் வரவேற்றார். மண்டல உடற்கல்வி ஆய்வாளர் கண்ணையன் பேசினார். துணை முதல்வர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்