உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ.,வில் 25 பேர்விருப்ப மனு தாக்கல்

பா.ஜ.,வில் 25 பேர்விருப்ப மனு தாக்கல்

தாராபுரம்: உள்ளாட்சி தேர்தலில் தாராபுரம் நகராட்சி, யூனியன் பதவிகளுக்கு, பா.ஜ., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 25 பேர் மனு அளித்துள்ளனர்.பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது. தாராபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு கல்பனா, ÷ஷாபனா, வானதி ஆகியோரும், கொளத்துப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கங்காதேவி மற்றும் 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில் தாராபுரம் நகராட்சி தலைவராக பா.ஜ., கட்சியைச் சேர்ந்த சாந்தி வெற்றி பெற்றார். கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தபோது திறமையான நிர்வாகத்தால், நூற்றுக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்னையை தீர்த்தார். இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் தர்மராஜ், ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை