உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடம.தி.மு.க., விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடம.தி.மு.க., விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ம.தி.மு.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து அக்கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு பெற்றனர்.ஈரோடு நகரம், கொடுமுடி, மொடக்குறிச்சி யூனியன்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்களிடம் மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி எம்.பி., விருப்ப மனுக்களை பெற்றார். கோபிசெட்டிபாளையம் நகரம் மற்றும் ஒன்றியம், பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களில் தலைமை தணிக்கைக்குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதன் விருப்ப மனுக்களைப் பெற்றார். பவானி நகரம் மற்றும் ஒன்றியம், அம்மாபேட்டை, அந்தியூர், தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியங்களுக்கு, மாவட்டப் பொருளாளர் முத்துமாணிக்கம், சத்தி நகரம் மற்றும் ஒன்றியம், பவானி சாகர் ஒன்றியம், நம்பியூர் ஒன்றியங்களுக்கு மாவட்டத் துணைச் செயலாளர் கந்தசாமி விருப்ப மனுக்களைப் பெற்றார்.ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் சீட் கேட்டு வேலு, குணசேகரன், முருகன், அன்பழகன், தமிழரசு, மாவட்ட கவுன்சிலர் சீட் கேட்டு முருகேசன், பொன்னுசாமி, சிவகிரி டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சுப்பிரமணி, மொடகிஞூகுறிச்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வெள்ளியங்கரி, சாந்தாமணி உள்பட பல்வேறு பதவிகளுக்கு ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று விருப்ப மனு அளிக்கவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி