உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டுனர் உரிமத்துக்கு கல்வித் தகுதிநீக்க வணிகர் சங்கம் வேண்டுகோள்

ஓட்டுனர் உரிமத்துக்கு கல்வித் தகுதிநீக்க வணிகர் சங்கம் வேண்டுகோள்

ஈரோடு:ஓட்டுனர் உரிமம் பெறுவதில் கல்வித் தகுதி கட்டாயம் என்பதை நீக்க வேண்டுமென, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் அனுப்பிய மனு:தமிழக அரசின் வளர்ச்சிக்கு கனரக போக்குவரத்து வாகனங்களும், அத்தொழில் வளர்ச்சியும் முக்கியமானது. டீஸல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, ஓட்டுனர்கள் சம்பள உயர்வு என பல சிக்கல்கள் இருந்தும், தொழில் வளர்ச்சி பாதிக்காமல், கனரக லாரி போக்குவரத்து, பஸ் உரிமையாளர்கள் தமிழகத்தில் தினமும் சேவை செய்து வருகின்றனர்.இருப்பினும், ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் பல இடங்களில் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. கடந்த ஆட்சியில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற, பிரதான தகுதியாக குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற உத்தரவு, பல திறமையான டிரைவர்கள் உரிமம் பெற இயலாத சூழலை ஏற்படுத்தி உள்ளது.பல ஓட்டுனர்கள், வாகனங்களில் ஓட்டுனருக்கு உதவியாக பணி செய்து, தங்கள் திறமையால் ஓட்டுனர்களாகின்றனர். அவர்கள் குடும்ப வறுமையால் குறைந்த பட்ச கல்வித்தகுதியைக்கூட பெறாமல் போகின்றனர். இதனால், ஓட்டுனர் உரிமம் பெறுவதில் சிக்கில் ஏற்படுகிறது.எனவே, போக்குவரத்து உரிமம் வழங்கும் அலுவலகங்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், கல்வி, படிப்பு இல்லாதவர்களுக்கு, 'முறை சாரா கல்வியை,' பயிற்சியின் ஒருஅம்சமாக வழங்கி, எழுதப்படிக்க தெரிந்திருந்து, நல்ல உடல் நலத்துடன் இருந்தால், ஓட்டுனர் தேர்வு நடத்தி, உரிமம் வழங்க வேண்டும்.கடந்த தேர்தலின்போது, 'ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதியில் மாற்றம் செய்யப்படும்,' என பிரச்சாரத்தில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, போக்குவரத்து துறையில்நல்ல மாற்றங்களை ஏற்படுத்த, ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி அவசியமில்லை, என்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என அவர் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை