உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்புமனு

சத்தியில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்புமனு

சத்தியமங்கலம்: சத்தி அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியம் நேற்று கோட்டு வீராம்பாளையத்தில் இருந்து தன் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார். சத்தியமங்கலம் நகராட்சியில் கமிஷனர் சுந்தரமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்றுவேட்பாளராக அவரது மனைவி விஜி வேட்புமனு தாக்கல் செய்தார். அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் துரைசாமி தன் ஆதரவாளர்களுடன் கோபிரோட்டில் உள்ள புளியம்பட்டி பிரிவில் இருந்து ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். செண்பகபுதூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வரதராஜ் வேட்புமனு தாக்கல்செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை