உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈங்கூர் பஞ்., தலைவர் பதவி; கேபிள் பாலு மனு

ஈங்கூர் பஞ்., தலைவர் பதவி; கேபிள் பாலு மனு

சென்னிமலை: சென்னிமலை யூனியன் ஈங்கூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, கேபிள் பாலு என்ற பாலசுப்பிரமணியம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.அ.தி.மு.க.,வை சேர்ந்த நடராஜமூர்த்தியை, எதிர்த்து களம் காண்கிறார் பாலசுப்பிரமணியம்.நேற்று, தனது ஆதரவாளர்களுடன், ஊர்வலமாக வந்து, மனுத்தாக்கல் செய்தார். பஞ்சாயத்து முன்னாள் தலைவர் குட்டி என்ற சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேட்பாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''பஞ்சாயத்தின் அனைத்து வீடுகளுக்கும் சென்று, ஆதரவு கேட்ட பின்தான் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். எனது வெற்றிக்கு, எனது ஆதரவாளர்கள்தான் கடுமையாக உழைக்கின்றனர். மக்கள் எளிதில் அணுகும் தொண்டனாக இருக்கிறேன். அதனால், மக்கள் எனக்கு பெரும் ஆதரவு தருவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ