உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வ.வெள்ளோடு தலைவர் சின்னுசாமி மீண்டும் போட்டி

வ.வெள்ளோடு தலைவர் சின்னுசாமி மீண்டும் போட்டி

சென்னிமலை: சென்னிமலை யூனியன் வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் சின்னுசாமி மனுத்தாக்கல் செய்தார்.இவர், மாவட்ட அ.தி.மு.க., பொருளாளர் அப்பாத்துரை, நடுப்பாளையம் கண்ணுசாமி உட்பட தனது ஆதரவாளர்களுடன், நேற்று மனுத்தாக்கல் செய்தார். இவர் கூறுகையில், ''ஐந்து ஆண்டுகளாக தலைவராக இருந்து நல்ல பல திட்டங்களை செய்துள்ளேன். 100 சதவீதம் குடிநீர் தேவை, கான்கிரீட் சாலை பூர்த்தி செய்துள்ளேன். வருங்காலங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பேன். அனைத்து முதியவர்களுக்கும் உதவித்தொகை பெற்று தந்துள்ளேன். அ.தி.மு.க., அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சீரோடும், சிறப்போடும் கிடைக்க மக்கள் எனக்கு ஆதரவு தருவர். வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடு கட்டித் தருவேன். மக்கள் சிறப்பான வரவேற்பு தருகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை