உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடத்தல் அரிசி 900 கிலோ பறிமுதல்

கடத்தல் அரிசி 900 கிலோ பறிமுதல்

அந்தியூர்: அந்தியூரிலிருந்து பர்கூர் வழியாக, கர்நாடகா மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ரவி தலைமையிலான தனிப்படை போலீஸார், அந்தியூர் புதுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே கர்நாடக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம், ராமபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் நடேசனை (50) போலீஸார் கைது செய்தனர். லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை