உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாஜி, மேயர் காருக்குசிக்னலில் பார்க்கிங் வசதி

மாஜி, மேயர் காருக்குசிக்னலில் பார்க்கிங் வசதி

ஈரோடு: போக்குவரத்து நெரிசல் மிக்க, ஈரோடு, பி.எஸ்.பார்க் சிக்னலில், நடுரோட்டில், முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் மேயர் குமார் முருகேஷ் ஆகிய இருவரின் கார்களுக்கு, பார்க்கிங் வசதியை போலீஸார் ஏற்படுத்தி தந்தனர்.ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வினர் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர். முன்னதாக, பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அண்ணாதுரை மற்றும் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலையிட்டனர். அதன் பின், மனுத்தாக்கல் செய்தனர்.முன்னதாக, காலை 10 மணிக்கே பி.எஸ்.பார்க் சிக்னலுக்கு வந்த மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ், தனது 'இன்னோவா' காரை, சிக்னலில் வாகனங்களை ஒழுங்குபடுத்த வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளுக்கு மத்தியில் நிறுத்திச்சென்றார்.பின்னர் 11 மணியளவில் வந்த, மாஜி அமைச்சர் ராஜாவும் தனது காரை, மேயர் காருக்கு அருகில் நிறுத்திச் சென்றார். நகரின் நெரிசல் மிக்க, சிக்னலின் மத்தியில் இரண்டு கார்களும் நிறுத்தப்பட்டதால், பிரப் ரோட்டில் இருந்து, மார்க்கெட் பகுதிக்கு செல்லவேண்டிய, பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கி தவித்தன. போக்குவரத்து போலீஸாரும் இதை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.இதற்கு மாறாக, மேயர் பதவி தி.மு.க., வேட்பாளர் செல்லப்பொன்னி, தனது காரை சிக்னலை தாண்டி, ஓரமாக நிறுத்தியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ