| ADDED : செப் 30, 2011 01:55 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி தி.மு.க., வேட்பாளர் மணிகண்டனின் பெயர்,
வாக்காளர் பட்டியலில் இருவிதமாக உள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோபி நகராட்சி 20வது வார்டு தி.மு.க., வேட்பாளராக மணிகண்டன்
போட்டியிடுகிறார். இதே வார்டில் இரு முறை போட்டியிட்ட பழனியம்மாள்
என்பவரின் மருமகன்தான் மணிகண்டன். இவருக்கு எதிராக தி.மு.க., வை
சேர்ந்தவர்கள் சுயேட்சையாக களத்தில் குதித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில்
இவரது பெயர், மணிகண்டன், சரணவன் என இரு பெயர்களில், இரு இடத்தில் உள்ளது.
27வது வார்டு சீதாலட்சுமிபுரம் ஆறாவது வீதி பாகம் 110ல் மணிகண்டன்,
தகப்பனார் பெயர் சுப்பிரமணியம் என்று உள்ளது.இதுபோல், 20வது வார்டு
குப்பாண்டார் வீதி பாகம் 251ல் சரவணன், தகப்பனார் பெயர் சுப்பிரமணியம்,
வாக்காளர் அடையாள அட்டை எண்: டி.என். 19/123/0161682 என்றும் உள்ளது. இரு
இடத்திலும் அவரது ஃபோட்டோ உள்ளது.இப்பிரச்னையை கையில் எடுத்துள்ள
எதிர்ப்பாளர்கள், தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப தயாராகி வருகின்றனர். இரு
இடங்களில் இரு விதமான பெயர் உள்ளதால், வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படுமா?
என்ற கேள்வியும் எழுந்துள்ளது.