உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநில ஜூடோ போட்டியில் ஈரோடு மாணவர்கள் சாதனை

மாநில ஜூடோ போட்டியில் ஈரோடு மாணவர்கள் சாதனை

ஈரோடு:மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்தது. இதில் ஜூடோ போட்டியில் ஈரோடு மாவட்டம் ஓடத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 20 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பிளஸ் 2 மாணவன் பரணி, 81 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் தேசிய ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்றார். எட்டாம் வகுப்பு மாணவி தாரிகா, 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டாமிடமும், பிளஸ் 1 மாணவன் கனிஷ்க், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், உடற்கல்வி ஆசிரியைகள் கிருஷ்ணவேணி, புஷ்பவதி, பள்ளி தலைமையாசிரியர் பிரகாசம் ஆகியோரை, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ