ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் மாற்றம்
ஈரோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், ஈரோடு மண்டல பொது மேலாளராக பணியாற்றி வந்த சிவக்குமார், திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு மண்டலத்துக்கு பொது மேலாளராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதற்கான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார்.