உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.பி., காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜெகநாதன், 38; இவருக்கு, வெள்ளக்கல் பட்டியில் விவசாய நிலம் உள்ளது. நேற்று மாலை, 4:00 மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். கிணற்றின் அருகே சென்று மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது, பைப்பில் இருந்து வேகமாக தண்ணீர் வந்துள்ளது. இதில் நிலை தடுமாறி அருகில் உள்ள கிணற்றில் ஜெகநாதன் விழுந்தார்.அவ்வழியே சென்றவர்கள், கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்துள்ளனர். உள்ளே ஜெகநாதன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்குள் ஜெகநாதன் நீரில் மூழ்கி பலியானார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி