உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகள் போராட்டம்

அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகள் போராட்டம்

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டு கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை கட்டுமானப் பணிக்காக, விவசாய நிலங்களை வழங்கிய, எட்டு கிராம விவசாயிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நீர்ப்பாசன வசதி செய்து தரக்கோரி கோஷமிட்டனர். மதியம், 3:00 மணி வரை போராட்டம் தொடர்ந்த நிலையில், பொதுப்பணித்துறை அலுவலகம் முன், திடீரென ஷாமியானா அமைத்து, விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.அதில், 'மத்திய அரசின் பர்வேஸ் செயலி மூலம், திட்ட வடிவமைப்பு பொறியாளர் நிலத்தை அளவீடு செய்து, கொத்தமங்கலம் நீரேற்று நிலையம் வாயிலாக, மேற்படி பகுதிகளுக்கு நீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 'நீர்வளத்துறை தலைமை பொறியாளரிடம், நீர்ப்பாசன வசதி பற்றி பேச்சு நடத்தி, வரும் 15 நாட்களுக்குள் தேதி அறிவிக்கப்படும்' என, உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு, மாலை 5:00 மணிக்கு, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி