உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணபலன் கேட்டு உண்ணாவிரதம்

பணபலன் கேட்டு உண்ணாவிரதம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், திண்டலில் உள்ளது. சித்தோட்டை சேர்ந்த ஓம்சக்தி ஆறுமுகம், 75, அலுவ-லகம் எதிரே நேற்று அமர்ந்து, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது அவர் கூறிய-தாவது: என்னுடன் சேர்ந்து, 1,000க்கும் மேற்பட்டோர் சானிட்டரி இன்ஸ்பெக்டர் கோர்ஸ் முடித்து, சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்தோம். கிரேடு-1 பதவி உயர்வு கேட்டு, சென்னை உயர் நீதி-மன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அரசு இதை எதிர்த்த நிலையில், 2015 பிப்.,25ல் எங்களுக்கான உரிமையை உறுதிப்ப-டுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை, 1,000 பேருக்கான பணபலன்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு கூறினார். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்து, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று கிளம்பி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை