உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காதலித்த வாலிபர் வீட்டு முன்பு பெண் இன்ஜினியர் திடீர் தர்ணா

காதலித்த வாலிபர் வீட்டு முன்பு பெண் இன்ஜினியர் திடீர் தர்ணா

அந்தியூர்: அந்தியூர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 25, சிவில் இன்ஜினியர். இவர் அதே பகுதியை சேர்ந்த, 30 வயதான சிவில் இன்ஜினியரை, ஒன்பது ஆண்டுகளாக காதலித்துள்ளார். அவர் தற்போது டெல்லியில் பணிபுரிகிறார். வீட்டில் காதலை ஏற்காததால், சிவரஞ்சனியை விட்டு, அவர் விலகியுள்ளார்.இதனால் காதலனுடன் சேர்த்து வைக்ககோரி, பவானி அனைத்து மகளிர் போலீசில், இரு நாட்களுக்கு முன் மனு அளித்துள்ளார். போலீசார் வாலிபரை அழைத்து விசாரித்ததில், சிவரஞ்சனியை வேண்டாம் எனக்கூறி சென்றுள்ளார். இதையடுத்து கலெக்டரிடம், சிவரஞ்சனி மனு அளித்தார். அப்போது அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி, வாலிபர் வீட்டு முன், நேற்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தியூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை