உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சிலவரி செய்திகள்

ஈரோடு சிலவரி செய்திகள்

வாகன சோதனையில்ரூ.1.06 லட்சம் பறிமுதல்கோபி: கோபி அருகே நடந்த வாகன சோதனையில், 1.06 லட்சம் ரூபாயை, பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.கோபி அருகே கொளப்பலுார் பகுதியில், கோபி தேர்தல் பறக்கும்படை குழுவினர் நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த, ஸ்கார்பியோ காரை சோதனையிட்டதில், காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த, மதுரைவீரன், 27, என்பவரிடம் உரிய ஆவணமின்றி, 1.06 லட்சம் ரூபாய் இருந்ததை, அக்குழுவினர் பறிமுதல் செய்தனர். மதுரையில் நடக்கும் கோவில் திருவிழாவுக்காக பணம் கொண்டு செல்வதாக மதுரைவீரன் தெரிவித்தார். ஆனாலும், உரிய ஆவணம் இல்லாததால், அத்தொகையை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்து, கோபி தாலுகா ஆபீசில் ஒப்படைத்தனர்.தொழிலாளியை தாக்கியவரை கைது செய்யக்கோரி மறியல்கோபி: தொழிலாளியை தாக்கிய இருவரை கைது செய்யக்கோரி, கவுந்தப்பாடி நால்ரோட்டில் பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளையம் காலனியை சேர்ந்தவர் அம்மாசை, 42, கூலித்தொழிலாளி; கடந்த, 29ம் தேதி அதே பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் விழாவின் போது, அதே ஊரை சேர்ந்த சதீஸ், 30, பிரகாஷ், 35, என்ற இருவருக்கும், அம்மாசைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த இருவரும், தன்னை தாக்கியதாக, அம்மாசை கவுந்தப்பாடி போலீசில் புகாரளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஐய்யம்பாளையம் காலனியை சேர்ந்த, 70க்கும் மேற்பட்டோர், கவுந்தப்பாடி நால்ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.கவுந்தப்பாடி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி