உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீதேவி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

சீதேவி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

பெருந்துறை : பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவிலில் நடப்பாண்டு தேர்த்திருவிழா கடந்த, ௧௭ம் தேதி தொடங்கியது. நேற்று அதிகாலை குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைபவம் நடந்தது. பூசாரி முதலில் இறங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை மாலை தேர்கள் நிலை சேர்கின்றன. இதை தொடர்ந்து சீதேவி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா, முத்து பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. 26ம் தேதி காலை, மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் மறு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை