குரங்குகள் நடமாட்டம் வனத்துறையினர் ஆய்வு
தாராபுரம், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மூன்று குரங்குகள் நடமாடின. இதனால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள், சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் இடையே அச்சம் நிலவியது. இந்நிலையில் காங்கேயம் வனத்துறையினர், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். குரங்குகள் நடமாட்டம் குறித்து கேட்டறிந்தனர். குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு, மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.