உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்து, ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மேயர் மல்லிகா, நிர்வாகிகள் மனோகரன், பழனிசாமி, ஜெகதீசன், எம்.பி.பழனிசாமி, முருகானந்தம், ரத்தன் பிரத்வி உட்பட பலர் பங்கேற்றனர்.* ஈரோடு பெரியார் நகரில், பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் ஜெயலலிதா உருவ படத்துக்கு மாலை அணிவித்தனர். அங்கு பகுதி செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.*ஈரோடு மேற்கு மாவட்டம், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் முன் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நம்பியூர் ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனிச்சாமி, மணிகண்டமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.*பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் பவானிசாகர் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை