மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
13-Oct-2025
ஈரோடு, அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதும், விற்பனை செய்வது குற்றமாகும். தவிர தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளான கல் வெடி போன்றவற்றை தயாரிக்க, விற்க கூடாது. இந்நிலையில் கவுந்தப்பாடி பகுதியில் கல் வெடி விற்பனை செய்த, கவுந்தப்பாடி ஜே.ஜே.நகர் முத்துசாமி மகன் அருள்சபரி, 25; பவானி அம்மாபாளையம் ஜெகதீஸ் மகன் சிவராமன், 31, ஆகியோரை கவுந்தப்பாடி போலீசார் பிடித்து விசாரித்தனர். கோபி பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்றதை ஒப்பு கொண்டனர். இருவரையும் கைது செய்து, 450 கல் வெடியை பறிமுதல் செய்தனர். பின் கோபி வேட்டைக்காரன் கோவில் பகுதியில் ஒரு வீட்டில் கல் வெடி தயாரித்து விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவகுமார், 50, அவரது மகன் சவுந்தர், 22, ஆகியோரை கைது செய்து, 500 கல் வெடியை பறிமுதல் செய்தனர்.
13-Oct-2025