மேலும் செய்திகள்
இலவச கண் பரிசோதனை
25-Aug-2024
இலவச கண் சிகிச்சை முகாம்
15-Sep-2024
தாராபுரம்,: பிரதமர் மோடி பிறந்தநாளை ஒட்டி, பா.ஜ., சார்பில், தாராபுரம் அருகே வரப்பாளையத்தில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார் தலைமை வகித்தார். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் குழு, கண் தொடர்பான சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர். முகாமில், ௨௦௦க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் அறுவை சிகிச்சைக்கு, 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.பா.ஜ., மேற்கு ஒன்றிய பொது செயலாளர் கருணாகரன், விவசாய அணி மாவட்ட தலைவர் விவேகானந்தன், கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். முகாம் ஏற்பாடுகளை, கிளை தலைவர்கள் சிவராஜ், ராஜாமணி மற்றும் கவியரசு செய்திருந்தனர்.
25-Aug-2024
15-Sep-2024