உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்னிச்சர் கடைக்காரர் போக்சோவில் கைது

பர்னிச்சர் கடைக்காரர் போக்சோவில் கைது

பவானி :சித்தோடு அருகேயுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவச்சந்திரன், 43; சித்தோடு, நால்ரோட்டில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்கு வந்த, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், வேலையை விட்டு சிறுமி நின்றுவிட்டார். ஆனாலும் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் சிவச்சந்திரனை கைது செய்து, ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை