கிளை வாய்க்கால் ஓரத்தில் குப்பையால் சுகாதார கேடு
கோபி :கோபி அருகே வெள்ளாளபாளையம் பிரிவை கடந்து, பிரதான அத்தாணி சாலையோரத்தில், கூகலுார் கிளை வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலை கடக்க வசதியாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே மலைபோல் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது சரிந்து வாய்க்காலில் விழுவதால், பாசன நீர் மாசடைவதுடன் சுகாதாரக்கேடு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது நீர்வள ஆதாரத்துறையினர், வாய்க்காலை நாசப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.