உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் அதிகபட்சமாக 63.20 மி.மீ., மழை பதிவு

கோபியில் அதிகபட்சமாக 63.20 மி.மீ., மழை பதிவு

கோபியில் அதிகபட்சமாக63.20 மி.மீ., மழை பதிவு ஈரோடு, அக். 24-கோபியில் அதிகபட்சமாக, 63.20 மி.மீ., மழையளவு பதிவானது. ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு விபரம்(மி.மீ): ஈரோடு, 9.80, கோபி, 63.20, மொடக்குறிச்சி, 1, பெருந்துறை, 7, கொடுமுடி, 20, சென்னிமலை, 5.40, பவானி, 4, கவுந்தப்பாடி, 2.40, அம்மாபேட்டை, 1.80, எலந்தகுட்டை மேடு, 27, குண்டேரிபள்ளம், 8 மி.மீ., மழை பெய்தது.மொடக்குறிச்சியில் ஒரு வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ், நேற்றும் மழை நீர் தேங்கி நின்றது. எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ