உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலை, வணிக வரித்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் தலைமை வகித்தார்.பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும், 3 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை