உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயலர் விஜய்மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பணியின்போது இறந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய, இழப்பீடு தொகையை வழங்காத ஹரியானா அரசின் நடவடிக்கையை கண்டித்தும், அங்கு போராடி வரும் நகராட்சி ஊழியர்கள் சங்கம், தீயணைப்பு துறை ஊழியர் சங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு துறையில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பரிதாபாத் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் குடும்பத்துக்கு தலா, 50 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்க வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை