இன்று கிராமசபை கூட்டம்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செலவின ஆண்டு 2025-26க்கான செலவினங்கள் மீதான சமூக தணிக்கை நிறைவு பெறும் நாளில், சிறப்பு கிராமசபை கூட்டங்களை நடத்த அறிவிக்கப்பட்டது. இதில் ஏழாவது சுற்றின் கால அட்டவணையை திருத்தி, கிராமசபை கூட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி இன்று கன்னப்பள்ளி, கொந்தளம், தலமலை, குள்ளம்பாளையம், கனகபுரம், கூத்தம்பூண்டி, கொமாரபாளையம், ஒடையகவுண்டன்பாளையம், நல்லுார், கரட்டுப்பாளையம், பழமங்கலம் பஞ்.,களில் கிராமசபை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.