உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் குதித்து பாட்டி, பேத்தி தற்கொலை

கிணற்றில் குதித்து பாட்டி, பேத்தி தற்கொலை

ஈரோடு: ஈரோடு அருகே, கிணற்றில் குதித்து பாட்டி, பேத்தி தற்கொலை செய்து கொண்டனர். ஈரோடு, கவுண்டச்சிபாளையம் ஸ்ரீசக்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியர். இவர் மகள் விகா-சினி, 3. மணிவேலின் தாய் தமிழரசி, 65. நேற்று மதியம், 12:30 மணியளவில் வீட்டின் அருகே, கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்-தமான, 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பேத்தி விகாசினியுடன், பாட்டி தமிழரசி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதில் நீரில் மூழ்கி இருவரது உடலும் மிதந்தன. ஈரோடு தீய-ணைப்பு துறை வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி கயிறு கட்டி இருவரது உடல்களையும் மீட்டனர். எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து, வெள்ளோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை