உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆம்புலன்ஸில் குவா குவா

ஆம்புலன்ஸில் குவா குவா

அந்தியூர்: கோபி அருகே திங்களூரை சேர்ந்தவர் சக்திவேல், 30: இவரது மனைவி சுகன்யா, 24; தம்பதியர் இருவரும் ஊர் ஊராக சென்று சவுரி வியபாரம் செய்கின்றனர். ஒரு வாரமாக அந்தியூரில் தங்கி வியாபாரம் செய்கின்றனர். நிறைமாத கர்ப்பிணியான சுகன்யாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு இதயத்தில் சிறு கோளாறு இருப்பதால், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார். பருவாச்சி அருகே வாகனம் சென்றபோது, வலி அதிகரித்து ஓடும் ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது. இதனால் தாய், சேய் திரும்ப அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை