மேலும் செய்திகள்
ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா
09-Jan-2025
ஈரோடு: ஈரோடு, கோட்டை, சின்னபாவடியில் பிரசித்த பெற்ற பத்ரகா-ளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, 19ம் தேதி அதிகாலை தொடங்கியது. இதை தொடர்ந்து அன்று காலை கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இதை தொடர்ந்து குண்டம் பற்ற வைக்கப்-பட்டது.முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நேற்று காலை, 6:00 மணிக்கு துவங்கியது. கோவில் பூசாரி சிறப்பு பூஜை செய்து முதலில் இறங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்தனர். கைக்குழந்தைகளுடன் பலரும் குண்டம் இறங்கினர். குண்டத்தின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் கொட்டி வழிபட்டனர். காலை, 10:00 மணிக்கு கோவில் முன் பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்ம-னுக்கு படைத்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நாளை காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
09-Jan-2025