கோபி : கோபியில் நேற்று காலை முதலே வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலை, 6:00 மணிக்கு, பலத்த இடியுடன் மழை பெய்ய துவங்கியது. கோபி பஸ் ஸ்டாண்ட் சாலை, சத்தி சாலை, மொடச்சூர் சாலை, புதுப்பாளையம், கரட்டூர், குள்ளம்பாளையம், பாரியூர்சாலை உள்ளிட்ட பகுதியில் இரவு, 7:30 மணி வரை கனமழையாக கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. *டி.என் பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாபுதுார், வாணிபுத்துார், கொங்கர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 6:30 மணி அளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு, ௮:௩௦ மணி வரை கனமழை நீடித்தது.* நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வேமாண்டம்பாளையம், குளத்துப்பாளையம், மலையபாளையம், எலத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை, 4:௦௦ மணியளவில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.நம்பியூர் அருகே தண்டலுார் மாரியம்மன் கோவில் பகுதியில், மின்னல் தாக்கியதில் ஒரு வீட்டின் மேற்கூரை சேதமானது. டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவை பழுதாகின. அப்போது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமி மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். சூறாவளி காற்றால் பல இடங்களில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்தன. வேமாண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேருடன் மரம் சாய்ந்தது.வேமாண்டம்பாளையம் ஊராட்சி குளத்துப்பாளையம் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறியது.*சத்தியமங்கலம் மற் றும் சுற்று வட்டார பகுதிகளான கொமராபாளையம்,பெரியார் நகர், தாசரிபாளையம், கே.என்.பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு, 7:30 மணிக்கு துாறலாக தொடங்கிய மழை அதே வேகத்தில், ஒரு மணி நேரம் வரை தொடர்ந்தது.* வெள்ளித்திருப்பூர், மாத்துார், சின்ன மாத்தூர், மணல்காடு, ஆலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்றிரவு, 7:௦௦ மணி முதல், ௭:௩௦ மணி வரை கனமழை பெய்தது. இதேபோல் மூலக்கடை, செல்லம்பாளையம், எண்ணமங்கலம், வட்டக்காடு, வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்தது.