வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கொட்டிய கனமழை
அந்தியூர், அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்றிரவு கனமழை கொட்டியது. இதேபோல் வரட்டுப்பள்ளம், குரும்பபாளையம் மேடு, கோவிலுார், எண்ணமங்கலம், முத்தரசன்குட்டை, வட்டக்காடு, காக்காயனுார் பகுதியிலும், இரவு, 8:00 மணிக்கு தொடங்கிய மழை, 9:30 மணி வரை விட்டு விட்டு கனமழையாக கொட்டி தீர்த்தது. பலத்த மழையால் வட்டக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது.